144
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி பெய்ரூட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களில் ஒருவரான அரோரி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாசின் பிரதித் தலைவர் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயிற்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.