இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த சரிவு வீதம், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு இடையில், 0.3 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
மக்கள்தொகையில் 101,960 வயது வந்தோருடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில், ஜூன் 2017இல் 16.2 சதவீதம் புகைபிடித்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், தொற்றுநோய்களின் தொடக்கத்தில் 15.1 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15சதவீதமாகக் குறைந்துள்ளது.
2000ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புகைபிடிப்பதில் ஆண்டுக்கு ஆண்டு சரிவை தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் காட்டுகிறது.
2019ஆம் ஆண்டில், அரசாங்கம் 2030ஆம் ஆண்டிற்குள் சட்டப்பூர்வ வயதை உயர்த்துவது உட்பட இங்கிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது.
ஆனால், லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள், இந்த இலக்கை எட்டுவது கடினம் என்ற போதிலும் புகைபிடித்தலுக்கு எதிரான முயற்சிகளை மறுபடியும் செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.