திருமண தடை நீங்கணுமா? செவ்வாய்கிழமை வழிபாடு இப்படி செய்தாலே போதும்!

by Editor News

ராகுதோஷ நிவர்த்திக்காக துர்கை அம்மனுக்குரிய மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அம்மன். அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் நேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும். அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

விளகேற்றும் முறை

நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகள் தீர, ஞாயிறு மாலை 4.30 – 6.00 மணிக்குள் ராகு கால வேளையில், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதில் 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.

பூஜை செய்யும் முறை

இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்க வேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.

வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையு ம்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் கிழமை ராகு கால பூஜை பலன்

செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வரும் ராகு காலத்தில் விரதமிருந்து ராகுகால பூஜை செய்துவர பித்ரு தோஷம் மற்றும் திருமண தோஷம் நீங்கி நல்ல பலன் உண்டாகும். உடனே திருமணம் நிச்சமாகும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related Posts

Leave a Comment