8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்!

by Editor News

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடமாகாண சமூகமட்ட அமைப்புக்களால், 8 அம்சக்கோரிக்கைகளை
முன்வைத்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீரப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ”பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குதல்,கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதியான விரைவான விசாரணையை முன்னெடுத்தல், மனித சித்திரவதைகளை நிறுத்துதல்,பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை விரைவுபடுத்துதல், பூநகரிப் பிரதேசத்தில் பொன்னாவெளிப்பகுதியில் சுண்ணக்கல் அகழ்வையும், சீமெந்து தொழிற்சாலை அமைப்பதையும் உடன் நிறுத்துதல், மன்னார்தீவில் கனியமண் அகழ்வை உடன் நிறுத்துதல்,மன்னார்தீவில் காற்றாலைமின்சாரத்தை அமைக்காது, அதனை வேறுபகுதிக்கு மாற்றுதல் என எட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment