முற்றிலும் சைவத்தை மட்டுமே கடைப்பிடிப்பவர்களை ஒரு வகையாக பிரித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும், இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், அசைவ உணவுப் பிரியர்களாக இருந்தும், ஒரு மாத காலத்திற்கு இதனை கைவிட முடியுமா என்றால், ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லாம், நம் மனக்கட்டுப்பாடுதான் காரணம்.
அதே சமயம், ஏதோ ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும், உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதியேற்று கொண்டவர்களுக்கும் இது பெரிய விஷயமல்ல.
முற்றிலும் சைவத்தை மட்டுமே கடைப்பிடிப்பவர்களை ஒரு வகையாக பிரித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும், இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், அசைவ உணவுப் பிரியர்களாக இருந்தும், ஒரு மாத காலத்திற்கு இதனை கைவிட முடியுமா என்றால், ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லாம், நம் மனக்கட்டுப்பாடுதான் காரணம்.
அதே சமயம், ஒரு மாதத்திற்கு இதை கடைபிடிப்பதன் மூலம் என்னென்ன பலன் கிடைக்கும்? இதுகுறித்து மருத்துவர் ஏக்தா சிங்வால் கூறுகையில், “அசைவ பிரியர்கள் சைவ உணவுக்கு மாற ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக உடல்நலனை கருத்தில் கொண்டு சைவத்திற்கு மாறுகின்றனர். அசைவத்தில் கிடைக்க கூடிய அதே சத்துக்களை சைவத்திலும் ஈடுகட்ட முடியும் என்பது அவர்களுக்கு உந்து சக்தியாக அமைகிறது’’ என்று தெரிவித்தார்.
சைவ உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நீண்டகால நோய்களுக்கான அபாயங்களை குறைக்க முடியும் என்றும் ஏக்தா சிங்வால் கூறினார். இது தவிர சைவ உணவுகளாலும், அசைவத்தை கைவிடுவதாலும் என்னென்ன பலன் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
செரிமானம் மேம்படும் :
தாவர உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கும். அது நம் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலை தடுக்கும். நம் மலக்குடல் நடவடிக்கைகளை இலகுவானதாக இது மாற்றும்.
உடல் எடை குறைதல் :
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சைவ உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். இறைச்சிகளை ஒப்பிடும்போது தாவர உணவுகளில் கலோரிச் சத்து மிக குறைவாகும். மேலும் அவற்றில் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும் மற்றும் மிகுதியான உணவுத் தேடலை குறைக்கும்.
அழற்சி குறையும் :
இறைச்சி உணவுகள் நம் உடலில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் இன்னும் அதிகமான பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆக, அசைவத்தை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை சாப்பிடுவதால் அழற்சியை தவிர்க்க முடியும்.
கொலஸ்ட்ரால் குறையும் :
உணவு குறித்த அடிப்படை புரிதல் உள்ள எல்லோருக்குமே இறைச்சி உணவுகளில் தான் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பது தெரியும். தாவர உணவுகளிலும் கொழுப்புச்சத்து உண்டென்றாலும், அது நம் உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ராலை கொண்டிருக்கும் மற்றும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
ஆற்றல் மற்றும் இதர பலன்கள் :
தாவர உணவுகளில் மிகுதியான ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் ஆகியவை உள்ளன. அவை நம் உடலுக்கு நிலையான ஆற்றலை கொடுக்கும். அசைவ உணவுகள், குறிப்பாக சிவப்பு இறைச்சி உணவுகளால் புற்றுநோய்க்கான அபாயம் அதிகரிக்கும்.
பன்றி இறைச்சி மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் அபாயம் உண்டாகும். மாட்டிறைச்சி சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள் மற்றும் விதைப்பை புற்றுநோய் உண்டாகலாம்.