70
பயங்கரவாதத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் அறிவித்துள்ளார்.
இதேநேரம் காசாவில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் மேற்குக் கரையில் தீவிரவாதக் குடியேற்றவாசிகளின் வன்முறையைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.