மழைக்காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்கள்.. முன்னெச்சரிக்கையாக இதையெல்லாம் பண்ணுங்க..

by Editor News

மழைக்காலம் வந்துவிட்டாலே நம் மனம் குதூகலமாகிவிடும். அனல் தெறிக்கும் கோடை வெயிலிருந்து நமக்கொரு நிம்மதி கிடைக்கும். ஆனால், இந்த மழைக்காலத்தில் தான் பல தொற்று நோய்களின் பரவல் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த சமயங்களில் வைரல் காய்ச்சல் போன்றவை மிக எளிதாக நம்மை தாக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக வானிலை மாற்றம், ஈரப்பதம் அதிகரிப்பது, கொசுக்கள் அதிக எண்ணிகையில் பரவுவது போன்றவற்றை கூறலாம். இந்த மழைக்காலங்களில் நம்மை தாக்கும் பல வகையான காய்ச்சல் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக எடுக்க முடியும்.

இந்த மழைக்காலங்களில் நம்மை தாக்கும் பல வகையான காய்ச்சல் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக எடுக்க முடியும்.

டெங்கு:

மழைக்காலம் வந்தால் டெங்கு காய்ச்சல் பாதிக்கும் வேகம் அதிகரித்துவிடும். ஏடிஸ் என்ற கொசு வகைகளால் இந்த காய்ச்சல் பரவுகிறது. தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி, ரத்தப்போக்கு, சிராய்ப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும். நன்றாக நீர் அருந்தி விரைவிலியே சிகிச்சை எடுத்துக் கொண்டால் டெங்கு நோயை விரட்டலாம்.

மலேரியா:

மலேரியா காய்ச்சலும் கொசு கடிப்பதால் பரவுகிறது. கடுமையாக குளிர் அடிப்பது, நடுக்கம், தலைவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை எடுக்காவிட்டால், மூளையில் பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், உறுப்புகள் பாதிக்கப்படுவது அல்லது சர்க்கரை அளவு குறைவது போன்ற சிக்கல் ஏற்பட்டு உயிருகே ஆபத்தாக முடியும்.

டைஃபாய்டு:

சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா தொற்றால் நமக்கு டைஃபய்டு காய்ச்சல் வருகிறது. இவை அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவுகிறது. தொடர்ச்சியான காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், பசியின்மை, சோர்வடைதல் போன்றவை இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாகும். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து, ஆண்டிபயோடிக்ஸ் எடுத்துக் கொண்டால், டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

எலிக்காய்ச்சல்:

பாக்டீரியா தொற்றால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. மாசடைந்த நீர் அல்லது மண் மூலமக இந்நோய் நமக்கு பரவுகிறது. குறிப்பாக வெள்ளம் அதிகமாக தாக்கும் பகுதிகளில் இந்நோய் அதிகம் தாக்குவதை பார்க முடியும். தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைகளில் வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். சரியான ஆண்டிபயோடிக்ஸை எடுத்துக் கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

சிக்கன்குனியா காய்ச்சல்:

கொசுவினால் சிக்கன்குனியா நோய் பரவுகிறது. இந்த வைரல் தொற்றால் திடீரென காய்ச்சல் அதிகரிக்க தொடங்கி, தலைவலி, தசைகளில் வலி, கால் மூட்டுகளில் வலி, சோர்வு, சிராய்ப்பு போன்றவை ஏற்படும். சரி, சிக்கஙன்குனியா கய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? நல்ல ஓய்வு, நிறைய நீர் அருந்துதல், வலிக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து குணமாகலாம்.

மழைக்காலங்களில் நீங்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மழைக்காலங்களில் பரவும் காய்ச்சலில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால், உங்கள் சுற்றுபுறத்தை முதலில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கும் தண்ணீர் தேங்க விடாதீர்கள். அசுத்தமான உணவுகள் மற்றும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள். நன்றாக நீர் அருந்துங்கள். அடிக்கடி கையை சுத்தம் செய்யுங்கள். வீடுகளுக்குள் கொசுக்கள் புகாதவாறு ஜன்னல்களில் வலையை பொறுத்துங்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment