129
தமிழ் சின்னத்திரையில் மக்களிடம் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகள் என்றால் சன் மற்றும் விஜய் தான். டாப்பில் இருக்கும் இந்த தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் TRP சண்டையில் அதிகம் வரும்.
இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஹிட் தொடர்களுக்கு பஞ்சமே இல்லை. கொஞ்சம் TRP குறைவது போல் தெரிந்தால் உடனே அந்த தொடரை முடித்து புதிய தொடரை அறிமுகம் செய்துவிடுவார்கள்.
தற்போது இந்த இரண்டு டிவி சீரியல் நடிகர்களின் ஒரு புதிய காதல் ஜோடி உருவாகியுள்ளார்.
விஜய்யில் கண்ணே கலைமானே என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பார்வை தெரியாதவராக நடித்து வந்தவர் நடிகை பவித்ரா. இவர் சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சிங்கப் பெண்ணே தொடரை நடிகரை காதலிக்கிறாராம்.
அவர் யார் என்றால் சிங்கப் பெண்ணே தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் அமல்ஜித் என்பவரை தான் காதலிக்கிறாராம்.