71
அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என பலரை குறிவைத்து, இணைய-ஹக்கிங் பிரச்சாரத்தை ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான எப்.எஸ்.பி. செய்வதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
2019 தேர்தல் காலத்தில் சைபர் தாக்குதல்கள் மூலம் ஒரு குழு தரவுகளை திருடி அதனை பொது வெளியில் வெளியிட்டது என்றும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் என நூற்றுக்கணக்கான உயர் அதிகாரிகள் இதில் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மின்னஞ்சல்கள் திருடப்பட்டதாக கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா, பலமுறை மறுத்த போதும் இந்த குழுவிற்கு எதிராக அமெரிக்காவும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.