நடைபயிற்சி செல்வதால் ரத்த சர்க்கரை அளவு குறையுமா?

by Editor News

ரத்த சர்க்கரையை குறைக்க வேண்டும் என்றால் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் மிக எளிமையான நடைபயிற்சி செல்வதன் மூலமாக ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

சர்க்கரை நோய் அறிகுறிகள் :

தாகம் அதிகரிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகப்படியான பசி, சோர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை ரத்த சர்க்கரை மிகுதியாக இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். சில நபர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமலே கூட இந்த நோய் தாக்கக்கூடும்.

சீரான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல், இன்சுலின் தெரஃபி ஆகிய சிகிச்சைகளின் மூலமாக ரத்த சர்க்கரை நோயை எதிர்கொள்ள முடியும். சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கக் கூடியதுதான் என்றாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான நடவடிக்கைகளை கையாண்டால், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

எவ்வளவு தூரம் நடக்கலாம்.?

உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சாவகாசமாக நடக்கிறீர்கள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 3.2 கி.மீ. தொலைவுக்கு நடக்கலாம். அதுவே விறுவிறுவென்று நடந்து செல்கிறீர்கள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 3.2 கி.மீ. முதல் 4.8 கி.மீ வரையிலும் நடக்கலாம். மிக, மிக அதிவேகமாக நடக்கும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு 4.8 கி.மீ. முதல் 6.4 கி.மீ வரையிலும் நடக்கலாம்.

Related Posts

Leave a Comment