அரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இத் திட்டத்திற்கு எதிராகே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவோரை ருவாண்டா அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 15 அன்று வெளியான தீர்ப்பை அடுத்து, மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஊடாக அதனை சட்டமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு என்றும் சட்டவிரோதமாக படகு மூலம் புலம்பெயர்பவர்களை நிறுத்தி அவர்களின் உயிர்களை காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
அகதிகளின் உரிமைகள் பற்றி ஆழமாக அக்கறை கொண்டுள்ள ருவாண்டாவோடு சட்டவிரோத இடம்பெயர்வை தடுப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.