நமக்கு தெரியாமலேயே உடல் பருமனை ஏற்படுத்தும் விஷயங்கள் இதுதான்..!

by Editor News

உடல் பருமன் என்பது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு உடல் நலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறது. உடல் பருமன் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளது. இந்த பதிவில் உடல் பருமன் ஏற்படுவதற்கான ஒரு சில முக்கியமான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான நகரங்களில் பின்பற்றப்படும் உட்கார்ந்த வாழ்க்கை முறை: நகரமயமாக்கல் அனைவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து விட்டது என்று சொல்லலாம். வேலையின் காரணமாகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ நாம் கேட்ஜெட்டுகளை வழக்கத்தை விட அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டோம். ஹோம் டெலிவரிகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இந்த உட்கார்ந்த வாழ்க்கை முறை உடல் பருமன் உட்பட பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெற்று கலோரிகள்: ஆரோக்கியமற்ற பொருட்கள் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது முதல் வெற்று கலோரிகள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது வரை உடல் பருமனுக்கு பல்வேறு ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள் காரணமாகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் நாள்பட்ட நோய்கள்:

PCOD மற்றும் தைராய்டு கோளாறுகள் நமது வளர்சிதை மாற்றத்தை பாதித்து உடல் எடை அதிகரிக்க காரணமாகலாம். மேலும் டயாபடீஸ் போன்ற நாள்பட்ட நோய்கள் காரணமாகவும் உடல் பருமனை கையாள்வது ஒரு சவாலான பிரச்சனையாக திகழ்கிறது.

குழந்தை பருவத்தில் உடல் பருமன்:

கர்ப்பத்திற்கு திட்டமிடும் சமயத்தில் தொடங்கி மற்றும் குழந்தை பிறந்த பிறகு அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலமாக குழந்தை கால உடல் பலனை நாம் தவிர்க்கலாம்.

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் மற்றும் அதிகரித்த மன அழுத்தம்:

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமானது அதிக மன அழுத்தத்துடன் இணைந்து உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பூச்சி கொல்லிகள் காரணமாகவும் வளர்சிதை மாற்றம் சிதைக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் பருமனில் விளைவிக்கும் அறியப்படாத காரணிகள்:

மரபணு, உணவு மற்றும் உடல் செயல்பாடு போன்ற காரணிகளை தவிர குடல் அமைப்பில் காணப்படும் மைக்ரோபியம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில குடல் பாக்டீரியாக்கள் கொழுப்பை சேமித்து, வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவும் உடல் பருமன் ஏற்படலாம். வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச்சத்து குறித்த அறிவு திறன் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான யுக்திகள் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து நாம் விடுபடலாம். மேலும் குழந்தைகளை பொருத்தவரை ஆரம்ப கட்டத்திலேயே உடல் பருமன் வளர விடாமல் தடுத்து அது தொடர்பான வளர்ச்சிதை மாற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

Related Posts

Leave a Comment