மருதாணி நன்றாக சிவக்க…!

by Editor News

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 300 ml தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் சோம்பு, 2 டேபிள் ஸ்பூன் நல்ல நிறம் தரக்கூடிய டீ தூள், 5 கிராம்பு, 2 துண்டு பட்டை இவை அனைத்தையும் சேர்த்த பிறகு அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். இதை மீடியம் ஃப்ளேமில் வைத்து இந்த தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக கொதித்து சுண்டிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள். அப்பொழுது தான் இதில் சேர்த்து இருக்கும் பொருள்களின் சாறு அனைத்தும் தண்ணீரில் நன்றாக இறங்கும். இது மருதாணி நன்றாக சிவக்க பெரிதும் உதவி செய்யும். அடுத்ததாக ஒரு பவுலில் 300 கிராம் மருதாணி பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பெரும்பாலான கடைகளில் இப்பொழுது கிடைக்கிறது.

இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மருதாணி பவுடரில் 1 டீஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மருதாணி நம் கைகளில் இருந்து உதிர்ந்து விடாமல் இறுக்க பற்றிக் கொள்ள உதவி புரியும். அதன் பிறகு ஏற்கனவே ஆற வைத்த தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்படி கலக்கும் போதே நீங்கள் கைகளில் மருதாணி வைக்க போகிறீர்களா? அல்லது கோனை பயன்படுத்த போகிறீர்களா? என்பதை பொறுத்து மருதாணி தனியாகவோ கெட்டியாகவோ கரைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக கால் டீஸ்பூன் யூக்லிடிப்ஸ் தைலம் அல்லது கோடாரி தைலம் ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ளுங்கள். இதுவும் நன்றாக நிறத்தை அதிகரிக்கும். இவையெல்லாம் ஒன்றாக கலந்த பிறகு பவுலை மூடி போட்டு குறைந்தது ஆறு மணி நேரமாவது அப்படியே வைத்து விடுங்கள். பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்யக் கூடாது. இந்த நேரத்திற்குள்ளாக நாம் கலந்த பொருட்கள் எல்லாம் இந்த மருதாணி பவுடருடன் கலந்து இதுவே நல்ல நிறமுடன் மாறி இருக்கும்.

இப்போது இந்த மருதாணி உன் கையில் வைத்த பின்பு 6 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு கைகளில் இருந்து மருதாணியை உதிர்த்து விடுங்கள். இந்த சமயத்தில் எந்த காரணம் கொண்டும் தண்ணீர் ஊற்றி அளம்பவோ சோப்பு போட்டு கழுவவோ கூடாது. அதற்கு பதிலாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கையில் தேய்த்து கையில் ஒட்டி இருக்கும் மருதாணிகளை முழுவதுமாக எடுத்து விடுங்கள்.

இப்போது உங்கள் கைகளை பாருங்கள் இது வரையில் நீங்கள் எத்தனை முறை மருதாணி வைத்திருந்தாலும் இப்போது சிவந்துள்ளது போல சிவந்து இருக்க வாய்ப்பே இல்லை. இந்த முறை மருதாணி தயார் செய்து வைக்கும் போது நமக்கு விருப்பப்பட்ட முறையில் கோன் அல்லது கைகளை பயன்படுத்தி வைக்கலாம். இது மிகவும் அழகாகவும் நிறமாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Related Posts

Leave a Comment