உடலுறவின் போது தொடர்ச்சியாக விறைப்புத்தன்மை ஏற்படாத நிலையையே ஆணுறுப்பு விறைப்புத்தன்மை கோளாறு எனக் கூறப்படுகிறது. ஆணுறுப்பிற்கு ரத்தம் குறைவாக செல்வது, நரம்பு பாதிப்பு அல்லது உளவியல் காரணிகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. டயாபடீஸ், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஹார்மோன் சமநிலையில் ஏற்படும் மாறுதல்களும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. உளவியல் காரணங்கள் என்று பார்த்தால் மன அழுத்தம், பதட்டம், கவலை அல்லது உறவுமுறையில் இருக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை கூறலாம்.
பொதுவாக வயது அதிகரிக்க, அதிகரிக்க விறைப்புத்தன்மை கோளாறும் அதிகரிக்கும். ஆனால் ஆண்களின் வாழ்க்கையில் எந்த சமயத்திலும் இந்தக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சிகிச்சை என்று பார்த்தால், வாழ்க்கைமுறை மாற்றங்கள் முதல் மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் என பலவுள்ளது. விறைப்புத்தன்மை கோளாறுக்கு சரியான சிகிச்சை எடுக்க வேண்டுமென்றால் மருத்துவரை நேரடியாக சந்தித்து, பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பாலியல் செயல்பாட்டில் போதுமான அளவு திருப்தி ஏற்படுத்தாத அல்லது தொடர்ந்து ஏற்படுத்த முடியாத நிலையையே விறைப்புத்தன்மை கோளாறு என அழைக்கிறோம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான விஷயங்களும் என இதற்கு பல காரணங்களை கூறலாம் என்கிறார் Qurex நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஷைலஜ மிட்டல்.
டயாபடீஸ் காரணமாக தமனியில் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து ரத்தகுழாய் பாதிப்புகளான பெருந்தமனி தடிப்பு உண்டாகிறது. விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு இதுவொரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதற்கடுத்து ஹார்மோனில் ஏற்படும் சமநிலை குளறுபடிகள், நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்களான மனச்சோர்வு, கவலை மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள்
விறைப்புத்தன்மை எதனால் ஏற்படுகிறது என்பதை புரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். வாழ்க்கைமுறை குறைபாடுகளால் வரக்கூடிய டயாபடீஸ் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் நீங்கள் தினசரி சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவுமுறை மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரச்சனையின் தீவிரத்தை மட்டுப்படுத்தலாம்.
மனரீதியான காரணங்கள் என்றால் ஆலோசனை அல்லது தெரபி போன்றவை பயனுள்ளதாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏதாவது உறவுமுறைச் சிக்கல் இருந்தல் கூட இதில் சரிசெய்ய ஆலோசனை பெறலாம். சில குறிப்பிட மருந்துகள் ஆணுறுப்பிற்கு ரத்தோட்டம் செல்வதை அதிகரிக்கின்றன. தீவிர பிரச்சனையென்றால், ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சையோ அல்லது penile implants சிகிச்சை போன்றவை பயனுள்ளதாக இருக்க வாய்ப்புள்ளது.
விறைப்புத்தன்மை கோளாறு சரி செய்யக்கூடிய பிரச்சனை தான். இதை சரிசெய்ய வேண்டுமென்றால் மருத்துவர்களிடம் அலோசனை பெறுவது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் சேர்ந்து உங்கள் வாழ்க்கையின் தரத்தையும் பாலியல் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.