பார்ட்னரை சந்தோஷமா வைக்கணுமா?

by Lankan Editor

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை மற்றும் விரைவான விந்து வெளியேறுதல் உள்ளிட்டவற்றால் பாலியலில் பிரச்னைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்தகைய பிரச்னைகளில் இருந்து விடுபட, பாலுணர்வை அதிகரிக்க சில உணவு குறிப்புகள் பற்றி பார்க்கல.

பால் மற்றும் தேன் பழங்காலத்திலிருந்தே பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல் பாலில் பேரீச்சம்பழங்கள் கலந்தும் சாப்பிடலாம். முட்டை, பச்சை காய்கறிகள், முளைத்த விதைகள், பீட் ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றை தினசரி உட்கொள்வது பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்.

பழங்களை பொருத்தவரை ஆப்பிள், மாதுளை, ஸ்டார்பெரி, எலுமிச்சை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றைப் பயன்படுத்துவதால் பாலியல் திறன் அதிகரிக்கும். மேலும் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கலாம். இவற்றுடன் சில உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் பாலுணர்ச்சி அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக அளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது. அவை ஆற்றல் மற்றும் பாலியல் ஆற்றலின் சிறந்த மூலமாகும். எனவே வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட திட்டமிடுங்கள்.

முருங்கை

முருங்கை சார்ந்த உணவுகள் பாலியல் திறனை தூண்டும். முருங்கை கீரையை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேக விடவும். மென்மையான பேஸ்ட் போல் உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலை உணவுக்குப் பிறகு இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் முன்கூட்டிய விந்து வெளியேறும் பிரச்னை குறையும்.

பேரீச்சம்பழம்

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க பேரிச்சம்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பாலுறவை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. எனவே பாலுறவு பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தினமும் பேரீச்சம்பழத்தை இரவு அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இது பாலியல் பிரச்னைகளையும் குறைக்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. எனவே உங்கள் உணவில் வெண்டைக்காய்யை அடிக்கடி சேர்க்க திட்டமிடுங்கள்.

Related Posts

Leave a Comment