கார்த்திகை மாத பெளர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது..!

by Editor News

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித் தளமாக விளங்குவது திருவண்ணாமலை . இங்கு மகா தீபம் ஏற்றப்படும் அடுத்த நாளில் பெளர்ணமி கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது.

கார்த்திகை மாத பெளர்ணமி அன்று விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பெளர்ணமி அன்று அம்மையையும் அப்பனையும் நினைத்து மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபத்திருநாள் கொண்டாடப்படும் நாளில் அதுவும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் கிரிவலம் வருவது பலவித நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது.

கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷப ராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.

கிரிவலம் செல்ல நல்ல நேரம்

கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை 26ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 27ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பவுர்ணமி முடிவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது என திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment