கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான நல்ல நேரம் குறித்த முழு விவரம்..!!

by Editor News

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 26ஆம் தேதியன்று மலைமீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழாவிற்காக 60 நாட்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு..

1. 17 நவம்பர் 2023: கார்த்திகை 1 வெள்ளிக்கிழமை திருவண்ணாமலையில் கொடியேற்றம்.

2. 20 நவம்பர் 2023: (கார்த்திகை 4 திங்கள்) வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஈசன் வலம் வந்தார்.

3. 21 நவம்பர் 2023: (கார்த்திகை 5 செவ்வாய்) வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வருவார்.

4. 22 நவம்பர் 2023: (கார்த்திகை 6 புதன்) வெள்ளி ரதம்

5. 23 நவம்பர் 2023: (கார்த்திகை 7 வியாழன்) பஞ்சமூர்த்திகள் மகா ரதம். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வடம் பிடித்தல்

6. 26 நவம்பர் 2023: (கார்த்திகை 10 ஞாயிறு) பரணி தீபம் காலை 4 மணிக்கு, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம்

கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள். இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 23 ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.

Related Posts

Leave a Comment