2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிப்பு..!

by Editor News

அதன்படி ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் உழர் திருநாள், தைப்பூசம், குடியரசு தினம் என ஜனவரி மாதம் 6 நாட்களும், மார்ச் மாதம் புனித வெள்ளியை முன்னிட்டு ஒரு நாளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரம் மாதத்தில் வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி என 4 நாட்களும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினமும், ஜூன் மாதம் பக்ரீத் தினமும், ஜூலை மாதம் மொகரம் பண்டிக்கையும் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், கிருஷ்ணஜெயந்தி என 2 நாட்களும், செப்ரம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி, மிலாதுநபி என 2 நாட்களும், அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளியை முன்னிட்டு 4 நாட்களும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்: திங்கட்கிழமை – 6 செவ்வாய்கிழமை – 2 புதன்கிழமை – 5 வியாழக்கிழமை – 4 வெள்ளிக்கிழமை – 3 சனிக்கிழமை – 2 ஞாயிற்றுக்கிழமை – 2 ஆகும்.

Related Posts

Leave a Comment