இன்று சபரிமலை நடை திறப்பு..!

by Editor News

சித்திரை ஆட்டத் திருநாள் விசேஷ பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

மறைந்த திருவிதாங்கூா் மன்னா் சித்திரை திருநாள் பலராம வா்மா சபரிமலை கோயிலுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளாா். குறிப்பாக, மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி இவா் காணிக்கையாக வழங்கியது. ஆண்டு தோறும் இவரின் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஐயப்பனுக்கு செய்யப்படும் விசேஷ பூஜை சித்திரை ஆட்டத் திருநாள்.

இவ்வாண்டு இந்தத் திருநாளை முன்னிட்டு, இன்று நவ.10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறந்து வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து நாளை நவ.11-ஆம் தேதி அபிஷேகம் முடிந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அதன் பிறகு இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதனை தொடர்ந்து மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில் 41 நாட்கள் மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.

Related Posts

Leave a Comment