சதுரகிரி மலையேற அனுமதி இல்லை !!

by Editor News

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வெள்ளியங்கிரி பருவதமலை போல பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பாதுகாப்பு கருதி ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி என எட்டு நாட்கள் மட்டுமே மக்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த முறை அமாவாசையை முன்னிட்டு நவம்பர் 10 முதல் 14 வரையில் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக விருதுநகர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலையில் உள்ள நீரோடைகள் நிறைந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி இம்முறை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment