சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல்வற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் கீரையை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைப்பு:
கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, இரும்பு, கால்சியம் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவில் உள்ளன. எனவே இதை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்குவதைத் தவிர்க்கும். மேலும் இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குளிர்காலத்தில் இதை உணவாக சேர்த்துக்கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி:
குளிர்காலம் வந்தாலே நம்முடைய நோய் எதிர்ப்பு குறையக்கூடும். இதோடு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகளையும் நமக்கு ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் கீரையை கட்டாயம் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து தொற்று நோயை எதிர்த்துப்போராடுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்:
கீரையில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். எனவே உடற்சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்:
கீரையில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் இருப்பதால் எலும்புகள் வலுப்பெறுகிறது. வைட்டமின் கே உடல் கால்சியத்தை சரியாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
நாள்பட்ட நோய்களுக்கு எதிராக போராடுதல்:
கீரையில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே இது புற்றுநோய், இதயநோய் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட வியாதிகளிலிருந்து நமது உடலை பாதுகாக்க உதவியாக உள்ளது.
செரிமானத்திற்கு உதவுதல்:
கீரை நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்களில் ஒன்றாகும். இதை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, உடலின் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு குடல் இயக்கத்தை சீராக்குகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவியாக உள்ளது.