உலக வங்கியின் உதவியுடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டத்தின் ஊடாக சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத 8400 பணியாளர்கள் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அரசாங்கத்தின் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனைக் குறிப்பிட்டார்.
ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டம் 06 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.