அதிகரித்து வரும் காற்று மாசு அளவை கருத்திற்கொண்டு, இந்திய நகரமான புது டில்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் டெல்லி செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிக வெப்பம் உள்ள இடங்களில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமான பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு, இது சரியாக செயல்படுகிறதா என்பதை கண்டறிய 18 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், டீசல் பேருந்துகள் டெல்லிக்குள் நுழைவது நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் மின்சாரம் அல்லது டீளு-ஏஐ பேருந்துகளை தங்கள் டிப்போக்களில் இருந்து இயக்க அனுமதிக்குமாறு டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தலைநகரில் மோசமான காற்றின் தரத்தை கருத்தில் கொண்டு, அடுத்த 15-20 நாட்களில் காற்றின் தர குறியீட்டு வாசிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.