84
400 கிராம் பால்மாவின் விலை 22 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 948 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, லங்கா சதொச வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் பால்மாவை கொள்வனவு செய்ய முடியும்.
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தற்போது அதிகளவான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.