அடுத்த 2 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா விளையாடுவாரா …

by Editor News

காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் துணை கேப்டனும் ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா அடுத்த 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற மேட்சிங் போது ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்ட.து இதன் பின்னர் அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.

தற்போது அவருக்கு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பெறாத நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான மேட்சில் இந்திய அணி வெற்றி பெற்றது. இருப்பினும் அணியில் பாண்ட்யா இடம்பெற்று இருந்தால் அது கூடுதல் பலமாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ள அடுத்த 2 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சை தொடர்ந்து இந்திய அணி சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் அக்டோபர் 29ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதன் பின்னர் நவம்பர் 2ஆம் தேதி இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இந்த 2 போட்டிகளிலும் ஹரிதிக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது சிகிச்சை பெற்று வரும் ஹர்திக் பாண்ட்யா இந்த வாரம் இறுதியில் இருந்து தனது பந்துவீச்சு பயிற்சியை மீண்டும் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பாய்ண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்

Related Posts

Leave a Comment