விநாயகருக்கு அருகம்புல் மாலை – புராண கதை

by Editor News

அனலாசுவரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் தவித்து விடும் நிலையில் பிரம்மா தேவேந்திரன் ஆகியோர் சிவன், பார்வதியை சந்தித்து முறையிட்டனர். உடனே சிவன் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்துவிட்டு வரும்படி கூற விநாயகர் தனது படையுடன் கிளம்பினார்.

ஆனால் அவரால் அரக்கனை வெல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபடைந்த விநாயகர் அந்த அரக்கனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அரக்கன் அங்கு வெப்பத்தை வெளிப்படுத்த விநாயகருக்கு தாங்க முடியாத வெப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு விநாயகரின் தலைமேல் வைத்த அடுத்த நிமிஷமே அனலாசுரன் விநாயகர் வயிற்றுக்குள் ஜீரணம் ஆகிவிட்டான். அது முதல் தன்னை தரிசிக்க வருபவர்கள் அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று விநாயகர் கட்டளையிட்டார் இதனால் தான் இன்றும் விநாயகருக்கு அருகம்புல் சாத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ..

Related Posts

Leave a Comment