நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கொடுத்த எளிதான கேட்சை ரவீந்திரா ஜடேஜா கோட்டைவிட்டதால், ரச்சின் அரைசதம் அடித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்யவே நியூசிலாந்து பேட்டிங் விளையாடி வருகிறது. இதில் தொடக்க வீரர் டெவான் கான்வே, ரன் ஏதும் எடுக்காமல் முகமது சிராஜ் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்தப் போட்டியில் இடம் பெற்ற முகமது ஷமி வீசிய ஓவரின் முதல் பந்திலேயே வில் யங் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மீண்டும் 11ஆவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரை ரச்சின் ரவீந்திரா எதிர்கொண்டார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3ஆவது பந்தில் 2 ரன்னும், 4ஆவது பந்தில் பவுண்டரியும் அடித்தார். இதையடுத்து 5ஆவது பந்தில் அவர் கொடுத்த எளிதான கேட்சை ரவீந்திர ஜடேஜா கோட்டைவிட்டுள்ளார். அப்போது ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு ரச்சின் அதிரடியாக விளையாடவே இந்தப் போட்டியில் 3ஆவது அரைசதம் அடித்தார். இதில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும். தற்போது வரை அவர் 73 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
ரவீந்திர ஜடேஜா விட்ட கேட்சால் வந்த விபரீதத்தை இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜடேஜா கேட்ச் விட்டதைப் பார்த்து அவரது மனைவி ஆ, ஊ முகத்தில் கையை வைத்து கொண்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதே போன்று ரவீந்திர ஜடேஜா வீசிய அவரது 10ஆவது ஓவரில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டவீட்டுள்ளார். அப்போது மிட்செல் 59 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.