102
இஞ்சி தொக்கை சாதத்துடன் கலந்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர சளி,பித்தம்,அஜீரணம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இஞ்சி தொக்கு தயிர் சாதத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இஞ்சி – 100 கிராம்
- புளி – எலுமிச்சை அளவு
- வெல்லம் – சிறிதளவு
- தனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- தனியா – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- வெந்தயம் – 1/2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்
- இஞ்சி – 100 கிராம்
- புளி – எலுமிச்சை அளவுதாளிக்க
- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
- பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை
- இஞ்சியை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும்.
- பின் புளியை கெட்டியாக கரைத்துவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
- பின்னர் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள இஞ்சியையும் சேர்த்து வதக்கவும்.
- இஞ்சி நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும்.
- பின் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடி செய்து வைத்துள்ள வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம் சேர்த்து கிளறவும்.
- அத்துடன் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து பரிமாறினால் சுவையானஇஞ்சி தொக்கு ரெடி.