பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் யுகேந்திரனுக்கு தமிழ் சினிமாவில் நடந்த சோகம்- அவரே கூறிய விஷயம்

by Lankan Editor

யுகேந்திரன்

மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் யுகேந்திரன். நடிகர், பாடகர் என கலக்கிவந்த இவர் ஒருகட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை.

2001ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் குணசித்திர வேடங்களில் நடித்துவந்த இவர் குறிப்பாக விஜய்யுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

படங்களை தாண்டி ஒரு பாடகராக இதுவரை 600க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறாராம். வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த யுகேந்திரன் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார்.

அதில் அவர், நான் பாடிய பாடல்கள் பலருக்குமே தெரியாது, நான் பாடி முடித்த பிறகு ஏதாவது சில பிரச்சனைகள் இருந்தால் வேறொருவரை பாட வைத்து அவர் பெயரை போட்டு வெளியிடுகிறார்கள், இது சினிமாவில் நடக்கும் சகஜமான விஷயம் தான்.

சூர்யா நடித்த காக்கா காக்க படத்தில் என்னை கொஞ்சம் மாற்றி பாடல் நான் தான் பாட வேண்டும். ஏதோ சில காரணங்கள் தவற விட்டேன். அதேபோல் சில நடித்த செல்லமே ஒரு பாடல் நான் பாட வேண்டியதாக இருந்தது.

தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்திலும் புதுக்கோட்டை சரவணா என்ற பாடலை நான் பாடிவிட்டேன். அதற்குப் பிறகுதான் வேறொருவரை வைத்து அந்த பாடலை பாடி வேறொருவரை ஹம்மிங்கை மட்டும் அந்த பாடலில் வைத்திருந்தார்கள்.

அப்படி நிறைய பாடல்கள் நான் பாடி வேறொரு பெயரில் வந்திருக்கிறார். இதுபோல் சினிமாவில் பல எதிர்ப்பார்க்காத நிகழ்வுகள் நடந்துள்ளன என பேசி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment