சீனா பயணித்தார் ரணில்

by Lankan Editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று சீனாவிற்கு பயணித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்படிக்கைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்;.

பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10 ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துக்கொள்ள உள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கடன் நிவாரணம் தொடர்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என ஜனாதிபதி அலுவலகம் எதிர்பார்த்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் இரண்டு தடவைகள் அண்டை நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போதிலும் கடந்த வருடம் பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி விக்ரமசிங்க சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

Related Posts

Leave a Comment