காசாவில் உணவு, குடிநீரின்றி தவிக்கும் 50,000 கர்ப்பிணிகள்!

by Lankan Editor

காசா நகரில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களைக் குறிவைத்து கடந்த ஏழு நாட்களாக இஸ்ரேல் இராணுவம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் காரணமாக காசாவில் இதுவரை 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 340,000 க்கும் மேற்பட்ட மக்கள் காசாவைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசா நகரில் 50,000 கர்ப்பிணிகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறா விட்டால் நிலைமை மிகவும் மோசமாகும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment