பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றுள்ளனர்.
இவ்வாறு பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை எவ்வித முன்னறிவிப்புகளும் இன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பாரிய தாக்குதலில் 1500 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள அதேநேரம் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதற்காக இஸ்ரேல் இராணுவத்திலிருந்து வெளியேறிய சுமார் 300,000 பேர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மொஸ்கோவிற்கு விஜயம் செய்வதற்கான முயற்சிகளை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.