வால்நட்ஸ் – 2 கப்.
பேரீட்சைப்பழம் – 400 கிராம் விதை நீக்கியது.
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி.
சோள மாவு – 1/4 கப்.
நெய் – தேவையான அளவு.
தண்ணீர் – தேவையான அளவு.
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி வால்நட்டை சேர்த்து வறுத்து கொள்ளவும். பின் அது நன்கு ஆறியதும், மிக்சியில் ஒன்று இரண்டாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இதன் போது, பேரீட்சைப்பழத்தின் விதையை நீக்கி தனியே எடுத்து வைக்கவும். இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பேரீட்சைப்பழம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
பேரீட்சைப்பழம் நன்றாக மசிந்து, தண்ணீர் வற்றியதும் அதில் நெய் சேர்த்து கலந்து விடவும்.
இதையடுத்து, எடுத்து வைத்துள்ள சோள மாவில் தண்ணீர் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். சேர்மம் கெட்டியாக இருக்க கூடாது.
இப்போது, சோளமாவு தண்ணீரை பேரீட்சைப்பழத்தில் ஊற்றி நன்றாக கிளறவும். ஹல்வா பதத்திற்கு வந்ததும், இதில் ஏலக்காய் தூள், வறுத்த வால்நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
பிறகு நெய் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும். நெய் நன்றாக பிரிந்து வரும் நிலையில் அடுப்பை அனைத்து இறக்கினால், அருமையான பேரீட்சைப்பழ அல்வா தயார்.