FM Radioவை தூக்கிய ஸ்மார்ட்போன்கள் ..

by Editor News

சமீப காலமாக இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் FM Radio வசதி இல்லாமல் வெளியாகி வரும் நிலையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள ஆணை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது பல மாடல் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்து வருகின்றன. கேமரா, இண்டெர்னெட், ஃபிங்கர் சென்சார், ஜிபிஎஸ் என பல அம்சங்களோடு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்களில் FM Radio வசதி இல்லாமல் வெளியாகி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் ரேடியோ கேட்பவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதாலும், அப்படி கேட்பவர்களும் இணைய வசதி மூலமாக ஆன்லைனில் ரேடியோவை கேட்பதாலும், ஸ்மார்ட்போனுக்காக செலவினங்களை குறைக்கும் விதமாக FM சிப்செட்டை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தவிர்ப்பதால் தற்போதைய ஸ்மார்ட்போன்களில் FM Radio இருப்பதில்லை.

ஆனால் எஃப்.எம் வசதி நீக்கப்பட்டது குறித்து தற்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் FM அலைவரிசையை கிரகிக்கும் சிப்செட் வைக்கப்பட்டு FM Radio வசதி வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வசதியை நீக்க ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் எஃப்.எம் ரேடியோ சேவையை மத்திய அரசு விரிவுப்படுத்தி வரும் நிலையில் ரேடியோ கேட்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மோடி தொடர்ந்து மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாகவும் மக்களிடம் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment