பொறியியல் படிப்புகளில் சேர இன்று விண்ணப்பிக்கலாம் …

by Editor News

பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரச உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023- 24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க அடுத்த மாதம் 4-ந்தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary TNEA” payable at Chennai. என்ற பெயரில் வரைவோலையை பதிவுக் கட்டணமாக பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம். அத்துடன் OC, BC, BCM, MBC & DNC பிரிவினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.500, SC, SCA, ST பிரிவினருக்கான பதிவுக்கட்டணம் ரூ.250 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment