இளநீர் : கோடைகாலத்தில் கிடைக்கும் இயற்கையான பானங்களில் முதன்மையானது. குழந்தைகளின் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியத்திற்கு தேவையான பல வகை தாது சத்துக்கள் இதில் உள்ளன. வெயிலில் களைத்து நிற்கும் குழந்தைகளுக்கு உடனடி ஆற்றலை தரக் கூடியது. தினசரி ஒரு முழு இளநீர் அல்லது ஒரு கிளாஸ் அளவு இளநீர் அருந்துவது நல்ல பலனை தரும்.
தர்பூசணி : கோடை சீசன் என்றாலே தர்பூசணி இல்லாமல் நாம் சமாளிக்க முடியாது. நறுக்கி வைத்தோம் என்றால் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் நம் கண்களை பறிக்கும் மற்றும் சாப்பிட தூண்டும். மிகுதியான நீர்ச்சத்து மற்றும் இனிப்பு சுவை ஆகிய இரண்டும் ஒரு சேர நம் நாவில் கரைய தொடங்கும். சின்ன, சின்ன பீஸ்களாக வெட்டிக் கொடுத்தால் குழந்தைகள் இதை சாப்பிட்டுவிட்டு உணவை மறந்துவிடுவார்கள்.
எலுமிச்சை ஜூஸ் : மஞ்சள் நிற அமிர்த பழம் என்றே இதை வர்ணிக்கலாம். அந்த அளவுக்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு பலன் தரக் கூடியது. குறிப்பாக, களைத்துப் போகும் குழந்தைகளுக்கு எலக்ட்ரோலைட் சத்துக்களை தரக் கூடியது. அரை எலுமிச்சை பழம், ஊற வைத்த பாதாம் பிஸின், சப்ஜா விதை
மோர் : உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளும், குளிர்ச்சி தரவும் மோர் உதவும். கோடை காலத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு வயிறு வேக்காலம் ஆக வாய்ப்பு உண்டு. அதைத் தடுத்து, குடல் நலன் காக்க மோர் உதவும். தினசரி ஒரு கிளாஸ் மோரில் ஒரு சிட்டிகை ஜீரகத் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு அருந்தக் கொடுக்கலாம்.