உடற்பயிற்சி : நீங்கள் எந்தவித உடற்பயிற்சியும் செய்யாதவர் என்றால் நீச்சல் அடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் மற்ற எல்லா பயிற்சிகளை காட்டிலும் இது சிறப்பான பயிற்சியாக அமையும். நீச்சல் பயிற்சியின்போது நீங்கள் மேற்கொள்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் உங்கள் உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்.
உள் உறுப்புகளுக்கும் பலன் உண்டு : நீச்சல் பயிற்சி செய்வதால் உடலின் வெளிப்புற பாகங்கள் மட்டுமே கட்டுக்கோப்பாக மாறும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறானதாகும். நீச்சல் பயிற்சி செய்யும்போது அதிகப்படியாக மூச்சு இழுத்து விடுவீர்கள். அந்த வகையில் இது உங்கள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
நல்ல தூக்கம் வரும் : நீச்சல் அடித்தால் உடலில் உள்ள களைப்புகள் நீங்கி ஆழ்ந்த உறக்கம் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. தூக்கமின்மை பிரச்சினையால் அவதி அடைபவர்கள் தினந்தோறு மாலை வேளையில் நீச்சல் பயிற்சி செய்யலாம். தற்போதைய கோடை காலத்தில் உங்கள் உடல் உஷ்ணத்தை குறைக்கவும் அது உதவியாக இருக்கும்.
உடல் எடை குறையும் : நடைபயிற்சி, ஜாக்கிங், உணவுக் கட்டுப்பாடு என பலவித முயற்சிகளைக் காட்டிலும் உடல் எடையை குறைக்க சிறப்பான பலன்களை தரக் கூடியது நீச்சல் பயிற்சி ஆகும். நீச்சலின்போது அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
மனநலன் மேம்படும் : இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், நீச்சல் பயிற்சி செய்தால் உங்கள் மனம் குழப்பங்களில் இருந்து தெளிவடைந்து நிம்மதி அடையும். உங்கள் ஸ்ட்ரெஸ் மற்றும் மனக்கவலை ஆகியவை பறந்தோடும்.