சித்திரை அமாவாசை : சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி..

by Editor News

சித்திரை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் விசேஷ நாட்களில் இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.

அந்தவகையில், வருகிற 19ம் தேதி சித்திரை மாத அமாவாசயை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை ( ஏப்ரல் 17 – திங்கள் கிழமை ) முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி , சுந்தர மகாலிங்கரை தரிசிக்கலாம். அதேநேரம் 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது என வனத்துறை தெரிவித்துள்ளது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment