வெங்காய சமோசா …

by Editor News

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 1 கப்.

வெங்காயம் – 1.

உருளைக்கிழங்கு – 4.

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்.

கறிவேப்பிலை – ஒரு கொத்து.

கொத்தமல்லி – ஒரு கொத்து.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

பச்சை பட்டாணி – ஒரு கைப்பிடி.

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.

எண்ணெய் – தேவையான அளவு.

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

சமோசா செய்வதற்கு முன்னதாக, எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கு, (ஊற வைத்த) பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். பின்னர், அவித்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதேநேரம் சமோசாவிற்கு தேவையான மற்ற பொருட்களையும் தயார் செய்துக்கொள்ளவும்.

இதனிடையே ஒரு கப் மைதா மாவினை சலித்து சுத்தம் செய்து, பின்னர் சிறிதளவு தண்ணீர் மற்றும் எண்ணெயுடன் சேர்த்து பதமாக (ரொட்டி மாவு பதத்திற்கு) பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் சீரகம், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து இதனுடன் அவித்த உருளையினை உடைத்து சேர்க்கவும். பின்னர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் அவித்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி எடுக்க, சமோசாவிற்கான மசாலா ரெடி.

தற்போது பிசைந்து வைத்த மாவினை, தட்டையாக உருட்டி பின்னர் இதனுள் மசாலா வைத்து முக்கோண வடிவில் மடித்து, கொதிக்கும் எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க சுவையான வெங்காய சமோசா ரெடி.

Related Posts

Leave a Comment