ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல் ..

by Editor News

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் , 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந் தேதி தொடங்கி , மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது. இந்த தடை காலத்தை மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்ப்பது, தங்களது மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.

மேலும், மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் சந்தைகளில் மீன் வரத்து குறைவாக இருக்கும். ஆகையால் இந்தக் காலங்களில் மீன்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1200 விசைப்படகுகள் உள்ள நிலையில், நேற்று மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய தினம் மீன்களின் விலையும் அதிகரித்தே காணப்பட்டது. வருகிற 15-ந்தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்தக் காலத்தில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்துவிடும் என்றனர்.

Related Posts

Leave a Comment