மட்டன் பிரியாணி ரெசிபி ..

by Editor News

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி – 500 கிராம்

பாஸ்மதி அரிசி – 500 கிராம்

பட்டை – 4 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 4

பிரியாணி இலை – 2 துண்டு

இஞ்சி, பூண்டு அரைத்தது – 3 தேக்கரண்டி

வெங்காயம் – 3

பச்சை மிளகாய் – 6

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை – 1 கப்

புதினா இலை – 4 மேஜைக்கரண்டி

தக்காளி – 1

வெங்காயம் – 2

தேங்காய்ப்பால் – 1 கப்

தண்ணீர் – 4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 50 மி.லி.

நெய் – 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

1. முதலில் மட்டனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பின்னர் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

3. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு வதக்கவும்.

4. அதன்பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதங்கியதும் கொத்தமல்லி இலை, புதினா, மிளகாய்த்தூள் தக்காளி போட்டு வதக்கவும். தேங்காய்ப்பால், தன்ணீர் ஊற்றி உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் போட்டுக் கிளறவும்.

5. இப்போது தண்ணீர் கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி விடவும். குக்கரை மூடி, வெயிட் போடவும்.

6. 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கி வைக்கவும். வெயிட் எடுத்த பின் குக்கரைத் திறந்து நெய் ஊற்றி மெதுவாகக் கிளறி விட்டு பின்னர் மூடி வைக்க வேண்டும். இப்போது சூப்பரான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெடி.

Related Posts

Leave a Comment