+2 மாணவர்கள் காப்பியடிக்க உதவி.. 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

by Editor News

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 12ம் வகுப்பு கணித தேர்வின் போது மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக ஐந்து ஆசிரியர்கள் பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்களில் 12ம் வகுப்பு தேர்வு தேர்வுகள் நடைபெற்றன. இதனை மொத்தம் 7,040 பேர் எழுதினர். நீலகிரி மாவட்டம் மஞ்சுர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற கணித தேர்வின் போது மாணவர்கள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது.

நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். அதில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விடை எழுத உதவியது உறுதியானது. இதனையடுத்து இதுதொடர்பாக ராம்கி, மூர்த்தி, ராதாகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், செந்தில் ஆகிய ஐந்து ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment