சுற்றுலாத்துறையின் மூலம் மார்ச் மாதத்தில் 200 மில்லியன் டொலர் வருவாய் ..

by Editor News

சுற்றுலாத்துறையின் மூலம் மார்ச் மாதத்தில் 200 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ள நிலையில் இந்த காலாண்டில் மட்டும் 500 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 198.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது என்றும் இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில்,22 சதவீத அதிகரிப்பு என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், தேசியப் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வருவாய் 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் நிலவும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், இலங்கையின் சுற்றுலாத் துறையானது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நிலையான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment