207
உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்தை இத்தாலி நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சமர்ப்பித்துள்ளார். மீறி பயன்படுத்துவோருக்கு ரூ.89 லட்சம் அபராத விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சட்டமூலம் இன்னும் நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இரு கட்சிகளும் இந்த புதிய நடவடிக்கைக்கு வாக்கெடுத்த பின்னரே இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.