சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.44, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,720க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,590க்கு விற்பனையானது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 1.30 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.44, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒருகிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5 ஆயிரத்து 560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.