232
அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
கன்றல் கருதலுங் கருமை சேர்தலுந்
தின்றல் சுவைத்தலுந் தீமைகள் செய்தலும்
பின்றமை யென்றலும் பெருமை கூறலு
மென்றிவை யிறைபா லிசைகை யல்லவே.
விளக்கம்:
அகங்காரத்தினால் வரும் கோபத்தை எண்ணி இருப்பதும், செயல்களை செய்து கர்மங்களை சேர்த்துக் கொள்வதும், உயிரை வளர்ப்பதற்காக சாப்பிடாமல் வாய் சுவைக்காக ஆசைப்பட்டு சாப்பிடுவதும், தர்மத்திற்கு எதிரான தீய செயல்களை செய்வதும், தமக்கு பின்பு தான் மற்றவர்கள் என்கிற சுய நலத்தோடு இருப்பதும், தற்பெருமை பேசுவதும் ஆகிய இந்த ஆறு விதமான தன்மைகளும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் நிலைக்கு கொண்டு செல்லாது.