இங்கிலாந்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை …

by Editor News

பாதுகாப்பு காரணங்களுக்காக சீன செயலியான டிக்டாக்கை அரசு பணியாளர்கள் தங்கள் போன்களில் பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் அரசுப் பணியாளர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்த அண்மையில் அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள், அரசு சார்ந்த டிக்டாக் பக்கங்கள் இனி அந்நாட்டில் இயங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள Wifi-யில் இனி டிக்டாக்கை பார்க்க முடியாது என்றும் அந்நாட்டு நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டிக்டாக்கை முழுமையாக தடைவிதிப்பது குறித்து அமெரிக்காவில் பரிசீலிக்கப்பட்டு வரும் சூழலில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் டிக்டாக் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலியை பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment