‘நவராத்திரி’ இந்தியாவில் 9 இரவுகள் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான விழா. இந்தியாவில் மக்கள் 4 வகையான நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றனர். வராஹி நவராத்திரி, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி அல்லது சாரதியா நவராத்திரி, தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி அல்லது சைத்ரா நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இதில் வட இந்தியர்களால் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது.
சைத்ரா நவராத்திரி வரலாறு:
இந்து புனித நூல்களின்படி, துர்கா தேவியை சிவபெருமான் தனது பெற்றோரின் வீட்டிற்கு 9 நாட்கள் சென்று தங்க அனுமதித்தார். இந்த 9 நாட்களில் துர்கா மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதாக நம்பப்படுகிறது, இது தீமையின் மீது நன்மையின் வெற்றியை குறிக்கிறது. துர்க்கையை வழிபடுவது பலத்தை அளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்று முதல் நவராத்திரி விழா கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாட தொடங்கியது.
சைத்ரா நவராத்திரி எப்போது?
இந்த ஆண்டு திருவிழா மார்ச் 22-ம் தேதி தொடங்கி மார்ச் 30-ம் தேதி முடிவடையும் என்று த்ரிக் பஞ்சாங்கம் தெரிவித்துள்ளது. கட்டஸ்தாபன பூஜை விதி ஒன்பது நாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் வழிபடப்படும் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
துர்க்கையின் 9 அவதாரங்கள்
நாள் 1: மார்ச் 22 – பிரதிபதா – மா ஷைல்புத்ரி பூஜை
நாள் 2: மார்ச் 23 – த்விதியா – மா பிரம்மச்சாரிணி பூஜை
நாள் 3: மார்ச் 24 – திரிதியை – மா சந்திரகாண்டா பூஜை
நாள் 4: மார்ச் 25 – சதுர்த்தி – மா கூஷ்மாண்ட பூஜை
நாள் 5: மார்ச் 26 – பஞ்சமி – மா ஸ்கந்தமாதா பூஜை
நாள் 6: மார்ச் 27 – சஷ்டி – மா காத்யாயனி பூஜை
நாள் 7: மார்ச் 28 – சப்தமி – மா காலராத்திரி பூஜை
நாள் 8: மார்ச் 29- அஷ்டமி- மா மஹாகௌரி பூஜை
நாள் 9: மார்ச் 30 – ராம நவமி – மா சித்திதாத்ரி பூஜை
கட்டஸ்தாபனா முகூர்த்தம் என்றால் என்ன?
ஆளும் பிரதிபாதத்தின் மூன்றாம் நாளில் கட்டஸ்தாபன சடங்குகளை மேற்கொள்வது மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. சில காரணங்களால், இந்த காலகட்டத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றால், அபிஜித் முஹுரத்தில் பூஜை செய்யலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை சக்திகளை அகற்ற, துர்கா சப்தசதி பூஜையின் பலன்களை பெறலாம்.