ஐபிஎல் பிசிசிஐயின் புதிய விதிகள் என்னென்ன …

by Editor News

போட்டி தொடங்கும் முன்பு, 5 மாற்று வீரர் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்ற Impact Player முறை வரும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிறது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்கும் நிலையில், புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, டாஸ் போடும் முன்பே விளையாடும் 11 பேரின் பெயரை கேப்டன்கள் அறிவிக்க வேண்டியதில்லை. டாஸின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அறிவிக்கலாம்.

பந்துவீசும் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லையெனில், 30 அடி வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பந்து வீசும்போது, தேவையின்றி விக்கெட் கீப்பர் இடத்தை மாற்றினாலோ, பீல்டர்கள் இடத்தை மாற்றினாலோ, குறிப்பிட்ட பந்து Dead ball ஆக அறிவிக்கப்பட்டு, எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும்.

போட்டி தொடங்கும் முன்பு, 5 மாற்று வீரர் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்ற Impact Player முறையும் அமலாகிறது. அதிலிருந்து ஏதாவது ஒரு வீரரை போட்டியின் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். அதில், இந்திய வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

முதலில் அறிவிக்கப்பட்ட 11 வீரர்களில் 4 வெளிநாட்டு வீரர்களுக்குப் பதில் மூவரோ அல்லது அதற்கு குறைவாகவோ இருந்தால், Impact Player ஆக வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடியும். Impact Player-க்குப் பதில் வெளியேற்றப்பட்ட வீரர் போட்டியில் எந்த விதத்திலும் அதற்குப் பிறகு பங்கேற்க முடியாது. ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங் என எதிலும் அனுமதிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment