பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்ததாக சர்தேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இந்திய தேசிய கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு, காலிஷ்தான் கொடி ஏற்றப்பட்டதையடுத்தே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி பிரித்தானிய வெளியுறவுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்திய தேசிய கொடி அகற்றல் :
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் திரண்ட காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்தியா கண்டனம் :
இதேவேளை, லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் தேசியக்கொடியினை ஏற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாது இருந்தமையால், அங்கு சென்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் அம்ரித்பாலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதோடு, தூதகரத்தில் கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக்கொடியை கீழே இறக்கி காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
மீண்டும் இந்திய கொடி :
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக்கொடியை இறக்கியதையடுத்து, அங்கு சென்ற லண்டன் காவல்துறையினர் காலிஸ்தான் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தியதுடன், வன்முறை கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தை உரிய முறையில் பாதுகாக்க தவறிய பிரித்தானிய அரசை கடுமையாக விமர்சிப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
அதனையடுத்து, லண்டன் தூதரகத்தில், இந்திய தேசியக் கொடியை மிகப்பெரிய அளவில் மீண்டும் பறக்க விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.